கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் இறந்த சிவஞானபுரம் தொண்டர் குடும்பத்திற்கு நிதியுதவி

விளாத்திகுளம்,  செப். 12:  கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் விளாத்திகுளம் அருகே சிவஞானபுரத்தில் இறந்த தொண்டர் சங்கரநாராயணன் குடும்பத்துக்கு வடக்கு  மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. தலைமைக் கழகம் சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.விளாத்திகுளம் அடுத்த சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர்  சீனி என்ற சங்கரநாராயணன் (79). விவசாயியான இவர் திமுக மூத்த முன்னோடி ஆவார். இவரது மனைவி ஜெயலட்சுமி. தம்பதிக்கு ஒரு  மகனும், மகளும் உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி மறைவு செய்தி மற்றும் அவரது  உடல் அடக்கம் செய்யும் நிகழ்வை டிவியில் பார்த்துகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் சங்கரநாராயணன் உயிரிழந்தார். இதையடுத்து அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தலைமைக் கழகம் சாா்பில்  ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை சங்கரநாராயணின் மனைவி  ஜெயலட்சுமியிடம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ  வழங்கினார்அப்போது விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வசந்தம்  ஜெயகுமார், அவைத்தலைவர் என்கே பெருமாள், கிழக்கு ஒன்றியச்  செயலாளா் சின்னமாரிமுத்து, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர்  காசிவிஸ்வநாதன், வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்  இம்மானுவேல், டேவிட்ராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் வேலாயுதபெருமாள், முன்னாள்  எம்எல்ஏ ராமநாதன், மாவட்ட பிரதிநிதி புதுராஜா, ஒன்றிய துணைச் செயலாளர்  காளிராஜ், விளாத்திகுளம் கூட்டுறவு சங்கத் தலைவர் வரதராஜபெருமாள், சிவஞானபுரம்  கிளைச் செயலாளர் சங்கரப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர் தண்டாயுதபாணி  உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: