×

இடிந்து விழும் அபாயத்தில் மயான கட்டிடம்

விளாத்திகுளம், செப் .12:  விளாத்திகுளம்  புதூர் அருகே இடிந்து விழும் நிலையில் காணப்படும் மயான கட்டிடத்தால்  கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 விளாத்திகுளம் அடுத்த  புதூர் ஒன்றியத்தில்  தவசிலிங்கபுரம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மயானம் தவசிலிங்கபுரம்-கிருஷ்ணாபுரம் சாலையில் 200 மீட்டர் தொலைவில்  மணியகாரன்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. கரிசல் மண்ணால் ஆன  200 மீட்டர் சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி பாழ்பட்டுள்ளது. அத்துடன் தவசிலிங்கபுரம் மயான கட்டிடமும் மருந்துக்குக்கூட பல்லாண்டுகளாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால் மயான கட்டிடத்தின் சிமென்ட் உதிர்ந்து கான்கீரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது புதூர் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மயான கட்டிடம்  எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு