குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அடுத்த வீரபாண்டியன்பட்டினம் மாடோனா  தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (35). கேரளாவில் சலூன்  கடை நடத்தி வருகிறார். இவர் தனது  மனைவி பேச்சியம்மாள், மாமியார்  லட்சுமி மற்றும் 4 வயது குழந்தை சேது லட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினருடன் கடந்த  9ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம்  செய்தார். அப்போது கோயிலில் சேதுலட்சுமி கழுத்தில் கிடந்த 4 கிராம்  நகை திருடுபோனது. திருச்செந்தூர் கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி நடத்திய விசாரணையில் ஆறுமுகநேரி பாரதி நகர் நடராஜர்  தெருவைச் சேர்ந்த முத்தையா மனைவி பலவேசம் (54), இதில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து அவரை  கைதுசெய்த போலீசார், நகையையும் மீட்டனர்.

Related Stories: