மின்கம்பி திருடியவர்கள் கைது

ஓட்டப்பிடாரம்: புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி காட்டுப் பகுதியில் காற்றாலை  நிறுவனம் சார்பில் மின்தொடர் அமைக்கும் பணிகளுக்காக மின்கம்பிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதை பார்வையிட நிறுவனத்தின்  நெல்லை கிளை அலுவலக உதவி மேலாளர் அய்யாத்துரை மகன் இந்திரன் (39)  நேற்று இரவு சென்றார். அப்போது ஏற்கனவே பைக்கில் வந்த 3 பேர், மின்கம்பிகளை  திருடிச்சென்றனர்.

 புகாரின் ேபரில் வழக்குப் பதிந்த புதியம்புத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய புதியம்புத்தூரை சேர்ந்த  முருகேசன் மகன் சேர்மபாலன் (20), அருணாசலம் மகன் துரைசிங் (24) ஆகிய இருவரை  கைது செய்தனர். அத்துடன் தலைமறைவான மணிமாறன் மகன் சிரஞ்சீவியை தேடிவருகின்றனர்.

Related Stories: