லாரி விபத்தில் டிரைவர் பலி

புதுக்கோட்டை: தூத்துக்குடி ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பாலசேகர் (49). லாரி டிரைவரான இவர், நேற்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தனது லாரியில் சரக்குகள் உள்ள கன்டெய்னரை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டைக்கு வந்துகொண்டிருந்தார். மறவன்மடம் அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது இவரது லாரி அதிவேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலசேகர் பரிதாபமாக இறந்தார். புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார், பாலசேகர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories: