ஆட்டோவில் மூதாட்டியை கடத்தி மயக்க மருந்து தெளித்து நகைபறிப்பு

கோவில்பட்டி, செப். 12:  கோவில்பட்டியில் ஆட்டோவில் மூதாட்டியை கடத்தி மயக்க மருந்து கொடுத்து 10 பவுன் பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (85). நேற்று முன்தினம் மாலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மெயின்ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக ஆட்டோவை  ஓட்டிவந்த மர்மநபர், அவரை குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லாமல் வேறு வழியில் சென்ற டிரைவர் திடீரென சீதாலட்சுமி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து, அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டார்.  பின்னர் சீதாலட்சுமியை ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றார். ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட சீதாலட்சுமி மயக்க நிலையில் சரிந்ததால் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ்,  கிழக்கு இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.  இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள கோவில்பட்டி கிழக்கு போலீசார், நகையை பறித்துச்ெசன்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: