எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு முகாம்

ஸ்பிக்நகர், செப். 12:  தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளியில் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

 தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்த இம்முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர்  எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து ஹிந்துஸ்தான்  பெட்ரோலிய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில்  வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன உதவி  மேலாளர் வேம்பன், என்எஸ்எஸ் பொறுப்பாசிரியர் சரவணன்,  பசுமைப்படை ஆசிரியை ஜோசபின் ஜெட்ரூத், தமிழ் ஆசிரியை டெய்சி,  ஓவிய ஆசிரியை எழில் சாரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: