விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்

ஆறுமுகநேரி,  செப். 12:  தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு எஸ்.பி. முரளி ராம்பா பரிசு வழங்கினார். தூத்துக்குடி கல்வி  மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே பாரதியார், குடியரசு தினவிழா விளையாட்டுப்  போட்டி காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளி சார்பில் ஐக்கிய  விளையாட்டு சங்க மைதானத்திலும், திருச்செந்தூரிலும் நடந்தது. மேலும் தடகளப் போட்டிகளும் நடந்தன.

 இதையடுத்து காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு  பள்ளித் தலைவர் டாக்டர் அஷ்ரப் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அக்பர்ஷா  முன்னிலை வகித்தார்.  தலைமை ஆசிரியரும் மாவட்ட விளையாட்டுப் போட்டி பொதுச்செயலாளருமான செய்யது அகமது வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எஸ்பி முரளி ராம்பா, வெற்றிபெற்ற பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு எஸ்.பி. முரளி ராம்பா பரிசுகள் வழங்கினார். தடகளப்  போட்டியில்அதிக புள்ளிகளைப் பெற்று ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி செயின்  தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் வென்றது. மகளிர் பிரிவில்  தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியும் ஓவர்ஆல் சாம்பியன் பட்டம் வென்றது.

 விழாவில் திருச்செந்தூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர்  லட்சுமணப்பெருமாள், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல்   கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர்  தீர்த்தோஸ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, எல்.கே. மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி முதல்வர் மீனா சேகர், சாகுபுரம் கமலாவதி மேலநிலைப் பள்ளி  முதல்வர் சண்முகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிகளை எல்.கே.  மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆனந்தகூத்தன், அகமது முஸ்தபா தொகுத்து வழங்கினர்.

 ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ஜமால்  முகமது, முகமது இஸ்மாயில் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: