கஞ்சா விற்ற இருவர் கைது

தூத்துக்குடி, செப்.12. தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன், எஸ்ஐ சந்திரமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நான்குகால் மண்டபம் சுடுகாடு அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த யாசர் அராபத்(23), சாமுவேல்புரத்தை சேர்ந்த முகமதுகபில்(19) என்பதும் அவர்கள் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் யாசர்அராபத் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertising
Advertising

Related Stories: