லால்குடியில் விநாயகர் சதூர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

லால்குடி, செப்.12:  லால்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தாலுகாவில்  விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆர்டிஓ பாலாஜி தலைமை வகித்து பேசுகையில், விநாயகர் சிலை 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள் வைக்க வேண்டும். விநாயகர் சிலை அருகில் விழா பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, பிற மதத்தினரின் மனம் புண்படும்படி செயல்பட கூடாது. சிலை நிறுவப்பட்ட நாளில் இருந்து 5 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் உள்ளிட்ட 34க்கும் மேற்பட்ட விதிமுறைகளை, அந்தந்த சிலை பொறுப்பாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.

 மேலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தாலுகாவில் 165க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளது. இவைகளுக்கு போலீசார் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் டிஎஸ்பிக்கள் லால்குடி ராஜசேகர், ஜீயபுரம் சிவசுப்ரமணியன், தாசில்தார்கள் லால்குடி ராகவன், மண்ணச்சநல்லூர் ரேணுகா, இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ஞானவேல், ராஜா, பீடிஓக்கள் ரெங்கராஜன், கிசன்சிங், பேரூராட்சி செயல் அலுவலர்கள் குமரன், ஜவகர், நளாயினி, பாலமுருகன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சோலைமுத்து உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: