மணப்பாறை அருகே மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம்

மணப்பாறை,ெசப்.12: மணப்பாறை அருகே நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி  ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கருத்தக்கோடங்கிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 242 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி பலமுறை கல்வி அதிகாரிகளிடம் கிராம மக்கள் வலியுறுத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி  மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர் மதியம் வரை அதிகாரிகள் வராததை கண்டித்து இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் கண்ணன் தலைமையில், ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு, வட்ட துணைச் செயலாளர் வேலுச்சாமி, நிர்வாகிகள் அருண்பிரசன்னா, இளையராஜா, சங்கர் ராஜ், பழனிவேல், உள்ளிட்டோர் மாட்டிடம் மனு அளித்தனர். இதன் பின்னர் வந்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Advertising
Advertising

Related Stories: