கேரளாவுக்கு ரூ.18.83 லட்சம் வெள்ள நிவாரண நிதி உதவி

திருச்சி, செப். 12: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துறைகளில் உள்ள ஆசிரியர்கள்,  அலுவலகப் பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்புவதற்காக சேகரிக்கப்பட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள், போர்வைகள், ஆடைகள், நாப்கின்கள், பற்பசை, முதலுதவிக்குத் தேவையான மருந்துகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும் துணைவேந்தர் மணிசங்கர், பதிவாளர் கோபிநாத் கணபதி ஆகியோர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

 மேலும் கேரள வெள்ள நிவாரண நிதிக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத் தொகையும் மாணவர்கள் கொடுத்த தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.18.83 லட்சம் கேரள முதல்வரின் நிவாரண நிதியில் நேற்று செலுத்தப்பட்டது.

Related Stories: