மருத்துவ சிகிச்சை பெறும் வாலிபரை விசாரணைக்கு இழுத்து செல்ல முயற்சி

மணப்பாறை,  செப்.12:  மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரை விசாரணைக்காக போலீசார் வலுக்கட்டாயமாக  காரில் ஏற்றி செல்ல முயற்சித்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை அருகேயுள்ள பின்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம் (53). இவர் அங்குள்ள காளியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இக்கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து பரசுராம், பூசாரி வேலை செய்ய கிராமத்தில் உள்ள சில பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி கோயிலில் பரசுராமிற்கும் எதிர்தரப்பிற்கும்  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்,  மோதல் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. இதில் காயமடைந்த இருதரப்பினரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், படுகாயமடைந்த  பரசுராமின் மனைவி கிருஷ்ணவேணி, மகன் வடிவேல், தந்தை நல்லபெருமாள் (எ) தம்பிராஜ் உள்ளிட்டேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
Advertising
Advertising

 இந்நிலையில், நேற்று புத்தாநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் ஒரு பெண் போலீஸ் உள்பட 5 போலீசார் தனியார் மருத்துவமனைக்கு வந்து வடிவேலை மட்டும் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது சிகிச்சை முடிந்து வருவதாக வடிவேல் கூற, போலீசார் வலுக்கட்டாயமாக வடிவேலை மருத்துவமனைக்கு வெளியே இருந்த காரில் ஏற்றினர். இதனையடுத்து, வடிவேலின் தாயார் கிருஷ்ணவேணி, சகோதரி வளர்மதி, தந்தை நல்லபெருமாள் உள்பட உறவினர்கள் காரை எடுக்க விடாமல் தடுத்தனர். இதில், கிருஷ்ணவேணியை காரின் முன்பக்கமிருந்து போலீசார் தர தரவென இழுத்து சென்று அகற்றியதால் அவர் மயங்கி விழுந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் போலீசாரின் செயலை கண்டித்து தனியார் மருத்துவமனை முன்புறம் உள்ள சாலையில்  மறியல் செய்தனர். இதனால், மணப்பாறை புத்தாநத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த மணப்பாறை டிஎஸ்பி ஆசைத்தம்பி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், தனியார் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வ

டிவேலின் தாயார் கிருஷ்ணவேணி, சகோதரி வளர்மதி, தந்தை நல்லபெருமாள் உள்பட உறவினர்கள் காரை எடுக்க விடாமல் தடுத்தனர். இதில், கிருஷ்ணவேணியை காரின் முன்பக்கமிருந்து போலீசார் தர தரவென இழுத்து சென்று அகற்றியதால் அவர் மயங்கி விழுந்தார்.

Related Stories: