15 ஆண்டுகள் தலைமறைவு : ரவுடி நாமக்கல்லில் கைது

மண்ணச்சநல்லூர், செப்.12: மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மாதவன் தம்பி செந்தில்குமார் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு மற்றொரு ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 23 பேரில் திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த ரவுடி செல்வம் (45) என்பவர் மட்டும் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டராக இமானுவேல் ராயப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ரவுடி செல்வத்தை பிடிக்க திருச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவுப்படி ஜீயபுரம் டிஎஸ்பி சிவசுப்ரமணியன் பரிந்துரைப்படி இனஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் முருகேசன், விஜயராகவன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடி செல்வத்தை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு செல்வம், நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் வேலைப்பார்த்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் நாமக்கல் சென்று மாட்டுப்பண்ணையில் இருந்த செல்வத்தை சுற்றிவளைத்து கைது செய்து நேற்று மண்ணச்சநல்லூர் கொண்டு வந்தனர். விசாரணைக்குப்பின் செல்வம் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 15 ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்து வந்த ரவுடி செல்வத்தை மண்ணச்சநல்லூர் போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: