வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கொறம்பு

திருச்சி, செப். 12: ரங்கம் தாலுகா அந்தநல்லுார் ஒன்றியம் எலமனுார், கொடியாலம், திண்டுக்கரை, அம்மன்குடி, அந்தநல்லுார், பெரியகருப்பூர், சின்னகருப்பூர், மேக்குடி கிராமங்களில் குறைந்தது 2ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு பாசனவசதி அளிக்க கூடிய ராம வாத்தலை வாய்க்கால்.இதன் தலைப்பு பகுதி, சிறுகமணி பேரூராட்சியில் பெட்டவாய்த்தலை பகுதியில் காவிரி ஆற்றுக்குள் வலது கரை ஓரமாக கொறம்பு (மண்அணை) அமைத்து திருப் பராய்த்துறைவரை காவிரி படுகை படுகைக்குள் ஆறாக ஓடி பாசனம் அளிக்கிறது.

மேட்டூருக்கும் கல்லணைக்கும் இடையில் ஆண்டு முழுவதும் பாசனவசதி பெற்று வரும் 17கால்வாய்களில் இதுவும் ஒன்று. கடந்த காலங்களில் காவிரியில் 2,000 முதல் 3,000 கனஅடி வரை தண்ணீர் வந்த காலங்களில் கூட இக்கால்வாயில் பாசன த்திற்காக தண்ணீர் வழங்கப்பட்டு வாழை, நெல், உளுந்து, பருத்தி என ஆண்டு முழுவதும் சாகுபடி பணிகள் நடை பெற்று வந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் இதன் தலைப்பு பகுதியில் காவிரி ஆற்றுக்குள் 30 முதல் 40 அடி ஆழத்திற்கு மேல் மணல் அள்ளப்பட்டதால் காவிரி ஆறு பள்ளமாகவும், ராமவாத்தலை கால்வாயின் தலைப்பு மேடாகவும் போனதால் பாசனத்திற்கான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அல்லல்பட்டு வருகின்றனர்.

இக்கால்வாய்களின் தலைப்பு பகுதியில் உள்ள மண்மேடுகளை போர்க்கால அடிப் படையில் அகற்றி பாசனத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த மாதம் காவிரியில் வினாடிக்கு 3லட்சம் கனஅடி நீருக்கு மேல் வந்த பெருவெள்ளத்தில் கால்வாய்க் கென அமைக்கப்பட்டு இருந்த கொறம்பு (மண்அணையில்) பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சிதிலமடைந்து போய் உள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர்கள் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கூறுகையில், காவிரியில் 1லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்த போது, இப்பாசன கால்வாயில் வந்த நீரை வைத்து ஒரு போக சம்பா சாகுபடிக்கென துவங்கப்பட்ட நாற்றங்கால் பணி, 40ஆயிரம் கனஅடியாக குறைந்து போனதால் தண்ணீர் கிடைக் காமல் உழவு சேற்றோடு காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ளது.காவிரி கரையோரம் உள்ள இப்பாசன கால்வாய் பகுதிகளில் சம்பா சாகுபடியை துவங்கவும், ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மோட்டார் பம்புகள் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைகளை காப்பாற்றவும், உடனடியாக இப்பாசன கால்வா யின் தலைப்பில் மேடிட்டு கிடக்கும் மணல் மேடுகளை அகற்றி கொறம்பு (மணல்) அணைகளை சீரமைத்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>