திருச்சியில் 14ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, செப்.12: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவை நிறுவனம் போர்க் லிப்ட் ஆபரேட்டர், புளோர் ஸ்டாப் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. நர்சிங் பணியிடத்திற்கு டிஎன்எம், ஏஎன்எம், பிஎஸ்சி, நர்சிங் படித்தவர்கள், ஹவுஸ் கீப்பிங், வார்டு பாய் பணிக்கு 8 முதல் 10ம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் இம்முகாமில் 18 முதல் 35 வயதுடைய 10 மற்றும் 12ம் வகுப்பு  மற்றும் பட்டம் படித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இந்நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும் என திருச்சி கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: