குடந்தையில் மதுவிலக்கு நுண்ணறிவு போலீசார் அதிரடி வீட்டில் பதுக்கி வைத்த மதுபான பாட்டில்கள், கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது

கும்பகோணம்,செப்.12: கும்பகோணத்தில் விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் வெளி மாநில மதுபான பாட்டில்களை பறிமுதல் ெசய்த மது விலக்கு நுண்ணறிவு போலீசார் வாலிபரை கைது செய்தனர். கும்பகோணம்  பாலக்கரை பகுதியில் கஞ்சா, கள்ளச்சராயம் மற்றும் வெளி மாநில மதுபானங்கள் பெருமளவில் விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் வந்த மதுவிலக்கு நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் பாலக்கரையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் பாலக்கரை முனீஸ்வரன் கோயில் அருகில் கல்யாணராமன் தெருவை சேர்ந்த ரவி மகன் கார்த்தி(31) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அவரது வீட்டில் சோதனை செய்த போது, 25 கிலோ கஞ்சா, 180 மிலி அளவு கொண்ட 1500 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள், 200 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்து கார்த்தியையும் கைது செய்தனர்.  
Advertising
Advertising

பறிமுதல் செய்த கஞ்சா மற்றும் மதுபான பாட்டில்களையும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கர்ப்பிணியிடம் ரூ.1.35 லட்சம் அபேஸ்: தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணியிடம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா உப்புப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கனகா(30). நிறைமாத கர்ப்பிணியான இவர் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்னும் சில தினங்களில் கனகாவுக்கு பிரசவம் ஆக இருந்தது. இதனால் பிரசவ செலவுக்காக கண்ணன் தனது வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கத்தை எடுத்து வந்து ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு கனகாவிடம் பணத்தை கொடுத்து விட்டு ஆஸ்பத்திரியின் மேல் பகுதியில் உள்ள மாடிக்கு தூங்க சென்று விட்டார். கனகா பணத்தை தலையனையின் அடிப்பகுதியில் வைத்து கொண்டு தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது கனகா தங்கியிருந்த அறை திறக்கப்பட்டிருந்தது. மேலும் தலையணையின் அடிப்பகுதியில் இருந்த ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம், வெள்ளி கொலுசு மற்றும் செல்போனை மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து கண்ணன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது ஆஸ்பத்திரியின் பின்பகுதி வழியாக மர்ம நபர் உள்ளே வந்து அங்குள்ள கேமராவை துணியால் மூடிவிட்டு பணம் மற்றும் செல்போன், கொலுசு ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related Stories: