மாரடைப்பால் மரணம் தொழிலதிபர் உடலை மார்பிங் செய்து மலேசியா கொண்டு செல்ல முடிவு

கும்பகோணம், செப். 12: மலேசியா நாட்டை சேர்ந்த முதியவர் கும்பகோணத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலை உறவினர்கள் மார்பிங் செய்து மலேசியா நாட்டிற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர் அரைக்காரூர்(63). தொழிலதிபர். இந்நிலையில் அவர் கும்பகோணம் பகுதியிலுள்ள கோயில்களை சுற்றி பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்தார். சுந்தரபெருமாள் கோயிலில் உள்ள தனது நண்பரின் சகோதரியான செல்வி என்பவரது வீட்டில் தங்கினார். கடந்த 8ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அரைக்காரூர் இறந்து விட்டார்.

உடனே அவரது உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிணவறையில் வைத்து வி்ட்டு, கோலாலம்பூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் குடந்தை வந்த அவரது உறவினர்கள் அரைக்காரூர் உடலை கோலாலம்பூருக்கு எடுத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மார்பிங் செய்ய வசதி இல்லாததால் தஞ்சை மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு மார்பிங் செய்ய உடலை எடுத்து சென்றனர். இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: