டெல்டா மாவட்டத்தில் தட்கல் முறை மின் இணைப்பு 6335 விவசாயிகள் விண்ணப்பம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்சி, செப்.12: டெல்டா மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டம் மூலம் தட்கல் முறையில் விண்ணப்பித்த 6335விவசாயிகளுக்கு போர்கால அடிப்படையில் மின்இணைப்பு வழங்கிட த.மா.கா விவசாய பிரிவு வலியுறுத்தியுள்ளது.  திருச்சி மின்வாரிய தலைமை பொறியாளரிடம் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் புலியூர்நாகராஜன் மற்றும் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: டெல்டாவில் சாகுபடி ெசய்துள்ள விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டம் மூலம் தட்கல் முறையில் உடனடி மின் இணைப்பு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி விவசாயிகள் கந்துவட்டிக்கு கடன் வாங்கி ரூ.2.70 லட்சம் முதல் 7 லட்சம் வரை பணம் கட்டி 45 நாட்களுக்க மேலாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

Advertising
Advertising

முக்கொம்புவில் மதகுகள் உடைந்து போனதால் காவிரியில் தண்ணீர் வரவில்லை. தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் 5ஆயிரம் ஏக்கரில் போடப்பட்ட நேரடி விதைப்பு நாற்றங்கால், நெல் நாற்றுகள் முற்றிலுமாக காய்ந்து கருகி விட்டது. எனவே தமிழக அரசு தட்கல் முறையில் வழங்கும் மின் இணைப்பை போர்கால அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்து. இது குறித்து புலியூர் நாகராஜன் கூறுகையில்:

 தட்கல் முறையில் மின்சாரம் கேட்டு தமிழகம் மழுவதும் 10ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் டெல்டா மாவட்டத்தில் மட்டும் 6335பேர் விண்ணப்பித்துள்ளனர். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக அறிவித்த இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்திட நேரடியாக விவசாயிகளின் நிலையை மின்துறை அமைச்சர் பார்வையிட்டு உடனடியாக விண்ணப்பித்த அனைவருக்கும் மின்சாரம் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: