பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை, செப். 12: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பட்டுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் மதிய உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கிளைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில் வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் சின்னசாமி, கருணாநிதி, வெங்கட்ராமன், எல்ஐசி முகவர்கள் சங்க நிர்வாகி பூவலிங்கம், மூத்த ஊழியர் திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை பொருளாளர் விஜயகுமார் நிறைவுரை ஆற்றினார், முடிவில்  காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கிளை செயலாளர் சம்பத் நன்றி கூறினார்,  ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: