குடியாத்தம் அருகே பரபரப்பு யானை தாக்கி 3 மீனவர்கள் படுகாயம் மோர்தானா அணையில் மீன்பிடிக்க சென்றபோது

குடியாத்தம், செப். 12:குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்ைச அளிக்கப்படுகிறது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தை சேர்ந்தவர்கள் குப்புசாமி(50), கோவிந்தசாமி(50), கஜேந்திரன்(55). இவர்கள் 3 பேரும் நேற்று காலை மோர்தானா அணையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.அப்போது தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை ஒன்று 3 மீனவர்களையும் தும்பிக்கையால் தூக்கி வீசி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்த விவசாயிகள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினர். மேலும் இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்களை யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை பார்த்து வனத்துறையினர் ஆறுதல் கூறினர்.

Related Stories: