காவலர் உடல்தகுதி தேர்வு: 984 பேர் பங்கேற்பு

திருச்சி, செப்.11: திருச்சியில் நேற்று நடந்த காவலர் உடல் திறன் தேர்வில் 984 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் 2ம் நிலை காவலர் (ஆண், பெண்), சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த மார்ச் 11ம் தேதி நடந்தது. இதில் வெற்றி பெற்ற திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உடற்கூறு, உடல் தகுதி தேர்வு 4, 5, 6ம் தேதிகளில் நடந்தது. திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த ஆண்களுக்கு நடந்த உடல் தகுதித் தேர்வில் 1,140 பேர் தகுதி பெற்றனர்.

பெண்களுக்கு நடந்த உடல் தகுதி தேர்வில் 784 பேர் பங்கேற்றனர். இதில் 127 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக கடந்த 8ம் தேதி உடற்திறன் தேர்வு நடந்தது. இதில் ஆண்களுக்கு 2ம் கட்டமாக நேற்று உடற்திறன் தேர்வு நடந்தது. கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 200 மீட்டர் ஓட்டம் போன்ற உடற்திறன் தேர்வு நடைபெற்றது. இதில் 984 ஆண்கள் பங்கேற்றனர். தேர்ச்சி பெறுபவர்களுக்கு 3ம் கட்டமாக அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.
Advertising
Advertising

Related Stories: