பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 191 பயனாளிகளுக்கு ரூ.4.50லட்சம் மதிப்பில் நலஉதவி

திருச்சி, செப்.11:  திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.

இதில் உழவர்  பாதுகாப்புத் திட்டம் மற்றும் சமூகபாதுகாப்புத் திட்டத்தின்கீழ் லால்குடி  வட்டத்தை சேர்ந்த 20 நபர்களுக்கு கணவரால் கைவிடப்பட்ரோர் உதவித்தொகை,  விதவை உதவித்தொகை, உறுப்பினர் சார்ந்தோர் திருமண உதவித்தொகை, இயற்கை மரண  உதவித்தொகை என மொத்தம் ரூ.2,91,000 மதிப்பில் பல்வேறு உதவித்தொகை  பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர்  வழங்கினார்.இதேபோல் சமூக பாதுகாப்பு  திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு தலா ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை  பெறுவதற்கான ஆணையும், ஸ்ரீரங்கம் வட்டத்தைச் சேர்ந்த 30 நபர்களுக்கு பல்வேறு  உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், திருவெறும்பூர் வட்டத்தை சேர்ந்த 22  நபர்களுக்கு பல்வேறு உதவித்தொகைக்கான ஆணைகளையும், திருச்சி மேற்கு வட்டத்தை  சேர்ந்த 27 நபர்களுக்கு பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,  தொட்டியம் வட்டத்தை சேர்ந்த 52 நபர்களுக்கு பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான  ஆணைகள் என மொத்தம் 156 நபர்களுக்கு பல்வேறு மாதாந்திர உதவித்தொகை  பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.
Advertising
Advertising

மண்ணச்சநல்லூர்  வட்டம், கல்பாளையம் மஜரா, தெற்கு ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த 12  நபர்களுக்கு நத்தம் வீட்டுமனைப்பட்டா, மனவளர்ச்சி குன்றிய 3  மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,500க்கான மாதாந்திர பராமரிப்பு  உதவித்தொகைக்கான ஆணைகள் என 191 பயனாளிகளுக்கு ரூ.4,51,500 மதிப்பில்  பல்வேறு நலத்திட்ட உதவிகள், பல்வேறு ஆணைகளை கலெக்டர் ராஜாமணி  வழங்கினார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை  ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) பழனிதேவி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும்  அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: