பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு

திருச்சி, செப்.11:  திருச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றபோது போலீசார் தடுத்ததால் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து 200 பேரை போலீசார் கைது செய்தனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் (எம்எல்) ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் காந்தி மார்க்கெட்டில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அங்கு போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அடுத்த ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். 22 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள சந்தன மஹாலுக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.இதேபோல் மணப்பாறையில் ரயில்மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேரும், துறையூர் தாலுகா உப்பிலியபுரத்தில் பந்துக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகளை சேர்ந்த 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.திருச்சி நகரில் ஆட்டோக்கள், டாக்சிகள், லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. முசிறியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோக்கள் இயக்கப்படவில்லைதா.பேட்டை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முசிறியில் நேற்று பயணிகள் ஆட்டோ இயங்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும், விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்கள் ஆட்டோக்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertising
Advertising

இதனால் பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் சிரமமடைந்தனர்.

Related Stories: