போக்குவரத்துதுறை டிரைவர் விபத்தில் பலி

மண்ணச்சநல்லூர், செப்.11: திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு மகன் பாலசுப்ரமணியன் (56). போக்குவரத்துதுறை வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். நேற்று தமிழ்நாடு போக்குவரத்து துறை பறக்கும்படை வாகனத்தை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கூத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது நின்றிருந்த லாரி மீது எதிர்பாராமல் மோதியது. இதில் டிரைவர் பாலசுப்ரமணியன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அதே வாகனத்தில் சென்ற இளநிலை பொறியாளர் பாண்டியன் (52) என்பரும் காயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: