வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்

திருச்சி, செப்.11: பெல் வளாகத்தில் உள்ள பாய்லர் பிளாண்ட் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியில் சரிபார்த்தல்  முகாமை எம்பி ரெத்தினவேல் நேரில் ஆய்வு செய்தார். தமிழகம் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியில் சரிபார்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாமில் புதிய காக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் திருத்தம், முகவரி மாற்றம் செய்யப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே பெல் ஊரகப் பகுதியில் உள்ள பாய்லர் பிளாண்ட் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி வாக்கு சாவடியில் நடந்த முகாமை எம்பி ரத்தினவேல் ஆய்வு செய்தார்  அப்போது திருச்சி ஆர்டிஓ அன்பழகன், திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை, அதிமுக ஒன்றிய செயலாளர் ராவணன், பேரூர் கழக செயலாளர் முத்துகுமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: