காங்கயத்தில் வரும் 13, 14ல் விநாயகர் சிலை ஊர்வலம்

காங்கயம், செப். 11: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காங்கயத்தில் வரும் 13, 14ம், தேதிகளில் விநாயகர் சிலைகளுடன்  விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.  விஸ்வ இந்து பரிஷத்  சார்பில் காங்கயம் பகுதியில் காங்கயம் நகர், சிவன்மலை மருதுறை, வரதப்பம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வரும் 12ம் தேதி விநாயகர் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பூஜைகள் செய்யப்பட்டு 13ம் தேதி ஊர்வலம் நடக்கிறது.  முக்கிய வீதிகள் வழியாக சென்று பழையகோட்டை ரோடு அகஸ்தீஸ்வரசாமி கோயிலில் நிறைவடைகிறது. பின்னர், அனைத்து சிலைகளும் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இதுபோல், இந்து முன்னணி சார்பில் காங்கயம் பகுதியில் காங்கயம் நகர், நத்தக்காடையூர், படியூர், சிவன்மலை, காங்கயம்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடக்கிறது.

பின்னர் 14ம் தேதி மதியம் 12 மணிக்கு அனைத்து சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் காங்கயம் உடையார் காலனிக்கு கொண்டு வரப்படுகிறது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பழையகோட்டை ரோடு அகஸ்தீஸ்வரசாமி கோயிலில் நிறைவடைகிறது. அனைத்து சிலைகளும் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை காங்கயம் ஒன்றிய, நகர இந்து முன்னணியினர் செய்து வருகின்றனர்.’

Related Stories: