வாக்காளர் சிறப்பு முகாமில் 1055 மனுக்கள் பெறப்பட்டன

காங்கயம், செப். 11: காங்கயம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் 1055 மனுக்கள் பெறப்பட்டன. காங்கயம் தொகுதியில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடியில் நடந்த முகாமில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தும் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. இதில், தாலுகா பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் வாக்குச்சாவடிகளை  தாசில்தார் மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். முகாமில், காங்கயம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் சேர்ந்து 1055 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது.  இந்த முகாமிற்கு பொதுமக்கள் அதிகமாக வரவில்லை. பெறப்பட்ட மனுக்களில் உள்ள குறைகள், சேர்த்தல், நீக்குதல், வாக்கு சாவடி மாற்றியமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: