சேவூரில் ரூ.15 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப். 11: அவிநாசி அருகே சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில் ரூ.15 லட்சத்துக்கு வர்த்தகம் நடபெற்றது. சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் 814 மூட்டைகள் வந்தன. இந்த ஏலத்தில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5095 முதல் ரூ.5150 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4860 முதல் ரூ.4910 வரையிலும், மூன்றாவது நிலக்கடலை  ரகம் ரூ.4180 முதல் ரூ.4190 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் நடந்தது. இதில், 20  வியாபாரிகள், 30 விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: