உடுமலை நகராட்சியில் சொத்து வரி உயர்வு

உடுமலை, செப். 11:  உடுமலை நகராட்சியில் சொத்து வரி உயர்வால் 4வது வகை பிரிவு நீக்கப்பட்டுள்ளது.  உடுமலை  நகராட்சியில் ஏ, பி, சி, டி என நான்கு மண்டலங்களாக தெருக்கள்  பிரிக்கப்பட்டு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது, சொத்து வரி  உயர்த்தப்பட்டுள்ளதால், 4வது பிரிவை நீக்கி 3 மண்டலங்களாக  குறைக்கப்பட்டுள்ளது.  ஏ பிரிவில் தற்போது சதுர அடிக்கு ரூ.1.55 ஆக  உள்ளது. இது ரூ.2.48ஆக உயர்கிறது. பி பிரிவில் ரூ.1.05 என்பது ரூ.68ஆக  உயர்கிறது. சி பிரிவில் 80 காசுகள் என்பது ரூ.1.28 ஆக உயர்கிறது. டி  பிரிவில் 50 காசுகள் வசூலிக்கப்பட்டது. தற்போது அது நீக்கம்  செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிட்டு இந்த சொத்து  வரி உயர்வு வசூலிக்கப்படும். இதன் விவரம் நகராட்சி அலுவலக வளாகத்தில்  ஒட்டப்பட்டுள்ளது. ஆட்சேபணை இருப்பவர்கள் நேரிலோ, எழுத்துப்பூர்வமாகவோ 30  தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையர் ராஜாராம்  தெரிவித்துள்ளார்.

Related Stories: