ஆனூர் கரியகாளியம்மன் கோவிலில் யாக பூஜைகள்

அவிநாசி, செப்.11: திருப்பூர் 15 வேலம்பாளையம்  ஆனூர் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (12ம் தேதி) நடக்கிறது.இதையொட்டி, நேற்று காலை யாகசாலை அலங்காரம், கும்பலங்காரம், கலாகர்ஷணம், கடஸ்தாபனம், முதற்கால யாக பூஜை, தீபாராதனையும், புதிய விக்ரஹங்கள் கண் திறப்பு, கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் நடந்தது. இன்று காலை நான்காம் கால யாக பூஜை, மாலை ஐந்தாம் கால யாக பூஜைகளும், நாளை (12ம் தேதி) காலை 7மணிக்கு கரியகாளியம்மன் மூலாலயம் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் கூட்டுவழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கருகாளியம்மன் அறக்கட்டளை, திருப்பணிக்குழு, 15 வேலம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Related Stories: