3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி

திருப்பூர் செப். 11:  திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சாமளாபுரம் தோட்டத்துபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களது மகள் சுகன்யாஸ்ரீ (3). இவர் நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ், உடனடியாக சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: