லிப்டில் சிக்கிய 6 பேர் மீட்பு

ஈரோடு, செப். 11: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லிப்டில், 6 பேர் சிக்கிய கொண்டனர். அவர்களை ஊழியர்கள் மீட்டனர். ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஏழு மாடிகள் கொண்டது. இங்குள்ள அலுவலகங்களுக்கு செல்ல, இரண்டு லிப்ட்கள், ஆப்ரேட்டர்கள் மூலம் இயக்கப்படுகிறது. நேற்று மாலை, 4:55 மணிக்கு, 5 ஊழியர்கள் லிப்டில் தரைத்தளத்தில் இருந்து மேல் நோக்கி சென்றனர். அப்போது திடீரென லிப்ட் பழுதாகி முதல் தளத்துக்கு ஒரு அடி முன்னதாக நின்றது. உள்ளே இருந்த ஆப்ரேட்டர் லிப்பை நகர்த்த முயன்றும் முடியவில்லை.    இதுகுறித்து லிப்ட் பொறியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த பொறியாளர் அவசர வழிக்கான சாவியை பயன்படுத்தி, ஆட்கள் மூலம் லிப்டை சிறிது துாரம் இயக்கி, கதவை திறந்து, ஆப்ரேட்டர் உட்பட 6 பேரை, 15 நிமிடத்தில் மீட்டனர். இதை தொடர்ந்து பழுது நீக்கும் பணி நடந்தது.

Advertising
Advertising

Related Stories: