விசிக கொடி கம்பம் மாயம் போலீசில் புகார்

ஊட்டி,செப்.11: ஊட்டி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் தம்பி இஸ்மாயில் ஜி1 காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதிகளில் எங்களது கட்சியின் கொடி கம்பம் கடந்த 2009ம் ஆண்டு அமைக்கப்பட்டது. கட்சியின் அனைத்து நிகழ்ச்சியின்போது, கொடியேற்றுவது வழக்கம்.இந்நிலையில்,நேற்று இரவு (நேற்று முன்தினம்) இந்த கொடி கம்பத்தை யாரோ சிலர் திருடி சென்றுள்ளனர். எனவே, அந்த கொடி கம்பத்தை மீட்டு தர வேண்டும். கொடி கம்பத்தை திருடி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தம்பி இஸ்மாயில் கூறியுள்ளார்.

Related Stories: