வாடகைக்கு விடப்பட்டதால் சேதமான விளையாட்டு மைதானம்

குன்னூர்,செப்.11: குன்னுார் வெலிங்டன் கண்டோன்மென்ட்  பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மார்க்கெட் நடப்பது வழக்கம். வழக்கம் போல் நேற்று முன் தினம் இந்த மைதானத்தில் கடைகள் போடப்பட்டது. அதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்ட நிலையில் மைதானம் மட்டுமல்லாமல் ஸ்டேடியத்திலும் டீக்கடைகள் வைக்கபட்டன.   தற்போது இந்த மைதானத்திற்கான உரிமம் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதால், பஞ்சு மிட்டாய் கடை முதல் பேன்சி கடை வரை  ஒரே மாதிரியான வாடகை வசூலிக்கபடுகிறது.

Advertising
Advertising

கடந்த காலத்தில் கடை ஒன்றுக்கு ரூ.250 வாடகை வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விளையாட்டு மைதானம் சுமார் ரூ.7 லட்சத்தில் சீரமைக்கபட்டிருந்த நிலையில், தற்போது மாதந்தோறும் கடைகள் வைக்க குழிகள் தோண்டப்பட்டு வருவதால் மைதானம் சேதமடைந்து மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.  இதனால் விளையாட்டு ஆர்வலர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். மேலும் ஸ்டேடியத்தில் டீக்கடைஅமைத்ததால் அதுவும் சேதமாகி வருகிறது. இதை தடுத்து நிறுத்தி மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: