போலீசார் முன்னிலையில் பூட்டை உடைத்து விநாயகர் கோயிலை திறந்த பொதுமக்கள்

மஞ்சூர்,செப்.11: நீலகிரி  மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலை கண்டி பகுதியில் சாலையோரம்  விநாயகர் கோயில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த கோயிலுக்கு  சென்று வழிபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர்  கோயில் அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தமானது என கூறி, கோயிலை பூட்டினார். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மஞ்சூர் போலீசில் புகார்  தெரிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று மஞ்சூர் எஸ்ஐ., சந்துரு,  கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய்துறையினர் முள்ளிமலைகண்டி பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து போலீஸ்  மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் பொதுமக்கள் பூட்டை உடைத்து கோயிலை  திறந்தனர்.

Related Stories: