கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மனு அளிக்கவரும் மக்களிடம் கோவை போலீசார் கெடுபிடி

கோவை, செப்.11: கோவை கலெக்டரிடம் மனு கொடுக்க வரும் மக்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுப்பதாலும், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் போலீசார் கெடுபிடி செய்வதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வாரந்ேதாறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கின்றனர்.  திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கும் சமயங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கும் நாட்களில் கோவை கலெக்டர் அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் மனு அளிக்க வரும் மக்கள் கொண்டு செல்லும் பொருட்களை சோதனை செய்கின்றனர். இவ்வாறு சோதனை செய்யும் போலீசார் கோைவ கலெக்டர் அலுவலக நுழைவாயிலின் இரண்டு கதவுகளையும் திறக்காமல், ஒரு கதவை மட்டும் திறந்து வைக்கின்றனர்.

திறக்கப்படாத மற்றொரு கதவு அருகே போலீசார் பேரிகார்டர்கள், டேபிள் போன்றவற்றை போட்டு சோதனையில் ஈடுபடுகின்றனர். மேலும், இதற்கு அருகே போலீஸ் உதவிகமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி நுழைவாயில் அருகே நெரிசல் ஏற்படுத்துகின்றனர்.  இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் வாகனங்கள், அடிக்கடி நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன.  இந்த நெரிசலை தவிர்க்க மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கும் சமயங்களில் 2 கதவுகளையும் திறந்து விட மக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மனு அளிக்க வரும் மக்களை சோதனை என்ற பெயரில் போலீசார் அதிக கெடுபிடி காட்டுவதால் மனுஅளிக்க வரும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், கூட்டமாக, தங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க வரும் மக்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் போலீசார் அனுமதிப்பதில்லை. பாதுகாப்பு காரணம் எனக்கூறி அதில் ஒருசிலரை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கின்றனர். மற்றவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். போலீசார் இந்த நடவடிக்கைகள், மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் வந்து மனு அளிப்பதை தடுப்பது போல் உள்ளதாக சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: