வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி

மொடக்குறிச்சி, செப். 11:  அறச்சலூர் அருகே வேலம்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பழனிச்சாமி. இவரது மகன் நவீன்குமார் (19). இவர் எல்லக்கடையில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நவீன்குமார் தனது நண்பர் கௌரிசங்கருடன் வெள்ளிவலசு வெட்டுக்காடு பகுதி வாய்க்காலில் குளித்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து சென்னிமலை தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவயிடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நந்தகுமார் உடலை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அறச்சலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: