ஸ்டிரைக் காரணமாக தமிழக கர்நாடக பஸ்கள் நிறுத்தம்

சத்தியமங்கலம், செப்.11:  சத்தியமங்கலம் பகுதியில் தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக தமிழகத்திலிருந்து கர்நாடகாவில் உள்ள முக்கிய நகரங்களான பெங்களுரு, மைசூரு, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட் உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழக அரசு பஸ்களும், கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கும் இருமாநில கர்நாடக அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த பந்த் காரணமாக சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பண்ணாரி சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.  இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து தாளவாடிக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மலைகிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். பின்னர் மாலை 6 மணி முதல் இருமாநில அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: