110 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு, செப். 11:  ஈரோடு புதுமஜீத் வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவு பொருட்கள் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கலைவாணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுமஜீத் வீதியில் அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (32) என்பவரின் கடையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட மனோஜிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: