அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் தேர்த்திருவிழா

பந்தலூர்,செப்.11: பந்தலூர் அன்னை வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா ஆலயத்தின் வருடாந்திர தேர் திருவிழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை நடந்தது. நேற்று காலை வேளாங்கண்ணி  ஆலயத்தில் சிறப்பு  திருப்பலியுடன் அருட்தந்தைகள்  கிரிஸ்துராஜ், பார்த்தசாரதி மற்றும் பங்கு தந்தை வில்சன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சி  நடைபெற்றது.  தொடர்ந்து மதியம் அன்னையின் அலங்கார தேரானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பந்தலூர் அட்டி வழியாக பஜார் வரை சென்று மீண்டும் ஆலயம் சென்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரப்பகுதியை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் செய்திருந்தது.

Related Stories: