பந்தலூர் அருகே அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட்

பந்தலூர்,செப்.11: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வருபவர் ராஜ்குமார். இவர் மாநில கலை ஆசிரியர்கள் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 6ம் தேதி நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், எருமாடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தொடர்ந்து விட்டு விட்டு விடுப்பு கடிதம் கொடுக்காமல் லீவு எடுத்து வந்ததாகவும், மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பதாக கூறி கடந்த 7ம் தேதி முதல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்ட் காலத்தில் நீலகிரியை விட்டு எங்கும் செல்லக் கூடாது என்றும் பணிநீக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் கூறுகையில்: நான் கடந்த 31ம் தேதி தமிழக முதல்வர் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் ஆகியோருக்கு தற்போது தமிழக கல்வித்துறை சார்பில் சிறப்பாசிரியர் நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் போலியானவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போலி நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் தெரிவித்ததால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பள்ளிக்கு சி.ஓ ஆய்வுக்கு வந்த போது காலாண்டு தேர்வு நெருங்கும் சமயத்தில் அரசு மூலம் மாணவர்களுக்கு  வழங்கப்படுகிற ஓவியம் நோட்டு புத்தகம் வழங்காமல் இருப்பதை சுட்டி காண்பித்தேன். அதன்பிறகே ஓவிய நோட்டு வழங்கப்பட்டது. மேலும் என் மீது கலை ஆசியர்கள் என்ற பெயரில் பொய்யான புகார்களை வைத்து கொண்டு நான் முறையாக லீவு லெட்டர் கொடுத்தும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தும் முதன்மை கல்வி அலுவலர் பழிவாங்கும் நோக்கில் சஸ்பெண்ட் செய்ததாக கூறினார்.

Related Stories: