கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

பந்தலூர்,செப்.11: பந்தலூர் அருகே நெல்லியாளம் டேன்டீ பகுதியில் கணவன் இறந்த துக்கம்  தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பந்தலூர் அருகே நெல்லியாளம்  டேன்டீ சரகம் மூன்று பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ்(34). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி(27). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வாரம் கும்பகோணம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் சுரேஷ் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த அன்றே ஜெயலட்சுமி மனமுடைந்து விஷம் குடித்தார். அவரை  உறவினர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் வயநாடு  பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: