பணியில் இருந்த போலீசை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

மதுரை, செப். 11: மதுரையில் போலீஸ்காரரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.மதுரை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேசனில் காவலராக பணி புரிபவர் கதிர்வேல். இவர் நேற்று முன்தினம் பாண்டிமுனீஸ்வரர் கோயில் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். கோயில் வாசல் முன்பு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை அப்புறப்படுத்தும்படி டிரைவரிடம் தெரிவித்தார். இதில் கதிர்வேலுக்கும், காரிலிருந்த மதுரை பாத்திமா நகரை சேர்ந்த செந்தில்குமார்(28), சிலோன் காலனியை சேர்ந்த அருண்பாண்டியன்(26) ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மற்றும் அருண்பாண்டியன், கதிர்வேலை தாக்கியதாக தெரிகிறது. இச்சம்பவத்தில் கதிர்வேலுக்கு காயம் ஏற்பட்டது. அவர் அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், அருண்பாண்டியன் ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: