பலதலைமுறையாக பயன்படுத்தி வந்த மயானம்,குளம் ஆக்கிரமிப்பு

மதுரை, செப். 11: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் மதுரை மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக டோக்நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மனு கொடுத்தனர். அரிட்டாபட்டியில் ஆதிதிராவிடர்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு செல்ல முடியாமல் ஓடைக்கரை பொது பாதையை அடைத்து தடுப்பதாகவும், 21 முறை மனு கொடுத்து எந்த நடவடிக்கையும ்இல்லை எனவும் ராமன் மற்றும் ஒரு சில விவசாயிகள் மனு கொடுத்தனர்.பலதலைமுறையாக பயன்படுத்தி வந்த மயானம் மற்றும் மயான குளத்தை தாசில்தாரின் டிரைவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மயானம் இல்லாமல் ஆதிதிராவிடர்கள் கஷ்டப்படுவதாகவும். மயானத்தை மீட்டு தரக்கோரி மேலூர் தாலுகா எட்டிமங்கல சுந்தரராஜபுரத்தை சேர்ந்த சிவலிங்கம் தலைமையில் கிராமத்தினர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் உள்பட மொத்தம் 1,208 மனுக்கள் நேற்று பெறப்பட்டன. இதன்மீது நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் நிர்மலாராஜம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

வாக்காளர் எண்ணிக்கை

திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 318 வாக்காளர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர் 1 லட்சத்து 41 ஆயிரத்து 392, பெண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 905, இதர வாக்காளர் 21 பேர் உள்ளனர்.

Related Stories: