மதுரை அரசு மருத்துவமனையில் இடநெருக்கடியை சமாளிக்க சிகிச்சை பிரிவுகள் இடமாற்றம்

மதுரை, செப்.11: மதுரை அரசு மருத்துவமனையில் நெருக்கடியை சமாளிக்க, வெளிநோயாளிகள் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனைக்கு நாள்ேதாறும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டு நடந்து கூட ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நெருக்கடியை சமாளிக்க சில சிகிச்சை பிரிவுகளை பழைய மகப்பேறு மருத்துவப் பிரிவிற்கு மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. எந்தெந்த பிரிவுகளை மாற்றுவது என்பதில் பல்வேறு இழுபறிகள் ஏற்பட்டது. ஒரு வழியாக முடிவாகி, நேற்று காலை, டீன் மருதுபாண்டியன் மேற்பார்வையில்,  துறைத்தலைவர்கள் முன்னிலையில் பல்ேவறு சிகிச்சை பிரிவுகள் பழைய மகப்பேறு மருத்துவ பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. பொது மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவான, 21,22 மற்றும் 23வது வார்டுகள், மறு பரிசோதனை பிரிவு, தொற்றா நோய் பிரிவு உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் நேற்று காலை முதல், தற்போது செயல்பட்டு வந்த இடங்களிலிருந்து பழைய மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து டீன் மருதுபாண்டியன் கூறும்போது, ``தற்போது மருத்துவ சிகிச்சை பிரிவுகள் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விைரவில் அறுவை சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் பழைய மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.  

Advertising
Advertising

Related Stories: