கழிவுநீர் கால்வாய் பாதையில் மண் கொட்டி ஆக்கிரமிப்பு

குஜிலியம்பாறை, செப். 11: குஜிலியம்பாறையில் கழிவுநீர் கால்வாய் பாதையில் மண் கொட்டி ஆக்கிரமித்ததை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாளையம் பேரூராட்சி 9வது வார்டு குஜிலியம்பாறையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள இக்குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து செல்லும்

கழிவுநீர் மயானம் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட கால்வாய் வழியே சென்று விடுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம், கவுநீர் கால்வாய் வழியை தனியார் சிலர் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி குடியிருப்புக்குளில் புகுந்து விட்டது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி பணியாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால் விடுமுறை என்பதால் சம்பவ இடத்திற்கு யாரும் வரவில்லை. இதனால் குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கழிவுநீர் கால்வாய் வழியை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் முறையாக செல்லும் வகையில் மண்ணை உடனே அகற்ற வேண்டும்’’ என்றனர்.

Related Stories: