குறைதீர்கூட்டத்திற்கு பிளாஸ்டிக் பையுடன் மனு கொடுக்க வராதீங்க

திண்டுக்கல், செப். 11: வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படிப்படியாக இதன் பயன்பாட்டையும் குறைக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக அரசு அலுவலகங்களில் இப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக கண்காணிப்புக்குழுவும் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மேலும் வணிகரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பலரும் குறைதீர்கூட்டத்திற்கு பிளாஸ்டிக் பைகளில் மனு, அது குறித்த ஆவணங்களை வைத்தபடி கொண்டு வருகின்றனர். இவற்றை பாதுகாப்பு போலீசார் சுட்டிக்காட்டி உள்ளே கொண்டு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பலரும் உடன் வந்தவர்களிடம் இவற்றை கொடுத்துவிட்டு மனுக்கொடுக்க உள்ளே செல்கின்றனர்.
Advertising
Advertising

அதிகாரிகள் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை அரசு அலுவலகங்களில் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராம மக்கள் இதுதெரியாமல் அவற்றை கொண்டு வருகின்றனர். இது குறித்து வலியுறுத்தி தடை செய்து வருகிறோம் என்றனர்.

Related Stories: