வாக்கிங் சென்றவரிடம் செல்போன் பறித்த 2 பேரை விரட்டி பிடித்த போலீசார்

வத்தலக்குண்டு, செப். 11: வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் ஜாபர்சாதிக். தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று மாலை இவர் வத்தலக்குண்டு- திண்டுக்கல் சாலையில் நடைபயிற்சி சென்றார். ஸ்டேட் பாங்க் காலனி அருகே செல்போனில் பேசியவாறு வந்தபோது பின்புறம் டூவீலரில் வந்த 2 பேர் அவரது செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.இதனால் அதிர்ச்சியடைந்த ஜாபர்சாதிக் அவ்வழியே வந்த மற்றொரு டூவீலரில் ஏறி கொண்டு அவர்களை விரட்டினார். தொடர்ந்து வத்தலக்குண்டு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் காரில் ஒரு அணி

யாகவும், ஜாபர்சாதிக் டூவீலரில் மற்றொரு அணியாகவும் அவர்களை விரட்டி சென்றனர். பட்டிவீரன்பட்டி குறுக்குரோடு கன்னிமார் கோயில் அருகே டூவீலரில் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பெரும்பாறையை சேர்ந்த விஜய் (25), மணிமுத்து (21) என்பது தெரிந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களது டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: