கொடைக்கானல் தேவாலயத்தில் தேர்பவனி

கொடைக்கானல், செப். 11: கொடைக்கானல் நாயுடுபுரத்தை அடுத்த பாக்கியபுரத்தில் உள்ளது புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம். இங்கு 33வது ஆண்டு தேர்திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் நவநாள் திருப்பலிகளும், சிறப்பு தியானங்களும் நடந்தன.

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் புனித ஆரோக்கிய அன்னையின் மின்அலங்கார தேர்பவனி நடந்தது.
Advertising
Advertising

முன்னதாக சிறப்பு திருப்பலி கொடைக்கானல் மறைவட்ட அதிபர் எட்வின் சகாயராஜா தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அடைக்கல்ராஜா தலைமையில் பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.

Related Stories: